--- --:--:-- --

கெட்டுப் போன கேக்கை விற்பனை செய்த பேக்கரி..!

4

சென்னை பட்டினப்பாக்கத்தில் வாடிக்கையாளருக்கு கெட்டுப் போன கேக்கை விற்பனை செய்ததாக கூறப்படும் பேக்கரி மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. சௌமியா பேக்கரி என்ற கடை இயங்கி வருகிறது.

 

கடந்த ஐந்தாம் தேதி வாடிக்கையாளர் ஒருவர் வாழைப்பழ கேக்கை வாங்கியுள்ளார். அந்த கேக்கை பிரித்து சென்ற பொழுது அதிலிருந்து துர்நாற்றம் அடித்ததாகவும் கெட்டுப் போனதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

 

இது குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பேக்கரி மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon