கிரிண்டர் செயலியின் மூலம் 90 ஆயிரம் பணத்தை மிரட்டி பறித்த மூவர்..!
திருப்பூரில் கிரிண்டர் என்னும் செயலியின் மூலம் 90 ஆயிரம் பணத்தை மிரட்டி பறித்து சென்று சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிண்டர் செயலி என்பது தன் பாலின உறவுக்கு அளிக்கும் செயலி.
இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி அம்மா பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் சில அடையாளம் தெரியாத நபர்களுடன் கிரிண்டர் செயலி மூலம் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் நட்பு வளரவே அவரிடம் தகாத உறவுக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் கூறும் இடத்திற்கு கார்த்திக் சென்ற பொழுது அங்கிருந்த கிஷோர் குமார், தனபால், சுபாஷ் ஆகிய மூன்று பேரும் கார்த்திக்கை மிரட்டி அவரிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றுள்ளனர்.
இது குறித்து திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் கிஷோர் குமார், சுரேஷ் மற்றும் சுபாஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.





