உடலில் காயங்களுடன் நான்கு வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உடலில் காயங்களுடன் நான்கு வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரகாஷின் உறவினர்களான திண்டுக்கல்லை சேர்ந்த ராஜேஷ்குமார் – கீர்த்திகா தம்பதியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
குழந்தை இல்லாததால் சிவானியுடன் கீர்த்திகா பாசமாக பழகி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெற்றோர் சம்மதத்துடன் சிவானியே அவரது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பத்து நாட்களாக கீர்த்திகா வீட்டில் இருந்த ஷிவானி உடலில் சூடு வைத்ததற்காக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





