மகளிர் கல்லூரிக்குள் புகுந்து மாணவிகளிடம் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்.!
தேவர் ஜெயந்தி அன்று மதுரையில் உள்ள மகளிர் கல்லூரிக்குள் புகுந்து மாணவிகளிடம் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
லேடி டோக் கல்லூரி வளாகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள் பாதுகாவலரை தாக்கி விட்டு இருசக்கர வாகனத்தை வைத்து முந்த முயன்றனர்.
அங்குள்ள மாணவிகளிடம் ஆபாசமாக பேசி அநாகரிகமாக நடந்ததுடன் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இருந்து வந்த போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர்.





