--- --:--:-- --

ஆவின்  பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்வு..!

1

ரஞ்சு ஆவின் பாக்கெட் பால் சில்லறை விற்பனையில் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டு 60 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ஆரஞ்சு பாக்கெட் பால் விலை மாற்றம் லிட்டர் 46 ரூபாய்க்கு விற்கப்படும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

பச்சை மற்றும் நீல நிற ஆவின் பாக்கெட் பால் விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்ய ஆரஞ்சு பாக்கெட் பால் விலை உயர்ந்துள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon