மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஆறு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி..!
ஆந்திராவில் வயலுக்கு சென்ற போது மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஆறு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் சோழ தட்டையை அறுவடை செய்ய 9 பெண்கள் டிராக்டரில் சென்று உள்ளனர்.
அப்பொழுது டிராக்டர் மீது மின் கம்பி விழுந்துள்ளது. முதல் நாள் ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில் மூன்று பேர் தீக்காயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கூலி வேலைக்கு சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த பெண்கள் மின்சார விபத்தில் சிக்கிய இந்த பகுதியில் சுகத்தை ஏற்படுத்தியுள்ளது.






