தாய்மொழியை உயிர்ப்புடன் வைத்து அதை முன்னெடுத்து செல்ல வேண்டும்..!
தாய்மொழியை உயிர்ப்புடன் வைத்து அதை முன்னெடுத்து செல்ல வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேல் 147-வது பிறந்த நாளில் குஜராத்கல்வி சங்கத்தில் அமித்ஷா உரையாற்றினார்.
அப்பொழுது அவர் தாய் மொழியை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தாய் மொழியை விட்டுக் கொடுக்கக் கூடாது என குறிப்பிட்டு பேசினார். இது குறித்து அவர் பேசுகையில் துரதிஷ்டவசமாக இந்த நாட்டில் ஆங்கிலம் உள்துறையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் மொழியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும் கூறினார்.
வீடுகள் கல்வி நிலையங்கள் உள்ள இடங்களில் பிள்ளைகளுடன் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் தாய் மொழிகளில் பேசுமாறு வலியுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




