--- --:--:-- --

வீட்டுத் தோட்டத்தில் மயங்கிய நிலையில் மலைப்பாம்பு மீட்பு..!

9

தென்காசி மாவட்டம் பொட்டல் புதூரில் வீட்டுத் தோட்டத்தில் மயங்கிய நிலையில் மலைப்பாம்பு மீட்கப்பட்டது. அசன் என்பவரின் வீட்டிற்கு பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் ஒரு உயிரினத்தை விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு கிடந்துள்ளது.

 

தகவலறிந்து வந்த வனத்துறையினர் ஆய்வு செய்த பொழுது விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மலைப்பாம்பு மீட்கப்பட்டு பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது.

 

Right Menu Icon