பள்ளி தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் எழுந்த சர்ச்சை..!
பீகாரில் பள்ளி தேர்வில் நாடுகள் குறித்த கேள்விகள் காஷ்மீரின் பெயர் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பீகார் மாநிலம் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் ஏழாம் வகுப்புக்கு கேட்கப்பட்ட கேள்வி தற்போது சாட்சியாக கிடைத்துள்ளது.
அந்த கேள்வியில் பின்வரும் நாடுகளை சேர்ந்த மக்கள் எவ்வாறு அழைக்கப் படுவார்கள் என கேட்கப்பட்டிருந்தது. மேலும் சீனாவில் வாழ்பவர்கள் சீனர்கள் என அழைக்கப்படுவார்கள் என உதாரணம் வழங்கப்பட்டிருந்த நிலையில் ஆப்ஷனில் காஷ்மீர் பெயர் இடம் பெற்றிருந்தது.
இந்தக் கேள்வி சர்ச்சையாக வெடித்த நிலையில் கேள்வித்தாள் மாநிலக் கல்வித் துறையிடம் வந்தது என்று தெரிவிக்கப்பட்டது.





