சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தை இபிஎஸ் தரப்பு புறக்கணித்தது ஏன்..?
சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி விவகாரத்தில் முந்தைய நிலையே நீடிக்கிறது. இதனால் சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தை இபிஎஸ் தரப்பு புறக்கணித்தது. எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமாரை அங்கீகரிக்க கோரி முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் கடிதம் இருந்தது.
ஆனால் அதிமுகவில் நீடிப்பதாகவும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் தாம் தான் எனவும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம் வழங்கியிருந்தார். சபாநாயகரின் முடிவை தமிழகமே எதிர்பார்த்த நிலையில் சட்டசபையில் பதவி மற்றும் இருக்கை விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பேரவை விதி 6 ன்படி இந்த கூட்டத்தொடரில் முந்தைய நிலையே தொடர சபாநாயகர் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பேரவையின் இன்றைய கூட்டத்தை புறக்கணித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் கலந்து கொண்டனர்.





