பிரபல சின்னத்திரை நடிகை வைஷாலி தூக்கிட்டு தற்கொலை..!
மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை வைஷாலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 29 வயதான வைஷாலி பல்வேறு ஹிந்தி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர்.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடலை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் அவரது அறையில் இருந்த கடிதமொன்றை கைப்பற்றியுள்ள போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.





