திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது..!
தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கழுகுமலை சேர்ந்த திருநங்கைகள் அனன்யா மற்றும் மகேஷ் கோவில்பட்டிக்கு நடந்து சென்று கொண்டிருந்த பொழுது ஆறுமுகம் நகர் பகுதியை சேர்ந்த நோவா யுவான் மற்றும் சங்கரன் கோவிலை சேர்ந்த விஜய் ஆகியோர் காட்டுப்பகுதிக்கு அவர்களை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு வைத்து திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களது முடியை அறுத்து வீடியோ வெளியான நிலையில் இருவர் மீது வழக்கு பதிந்த போலீசார் கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





