அங்கன்வாடி மையத்தில் 4 வயது குழந்தைக்கு காலில் சூடு..!
தர்மபுரி அருகே அங்கன்வாடி மையத்தில் 4 வயது குழந்தைக்கு காலில் சூடு வைத்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிராமியப் பட்டியை சேர்ந்த ஷங்கர்- கீர்த்திகா தம்பதியின் 4 வயது மகன் அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயின்று வந்தான்.
கடந்த 3ஆம் தேதி அங்கன்வாடி மையத்தில் இருந்து வந்த குழந்தையின் காலில் சூடு வைத்ததாக கூறப்படுகிறது. அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் சமையலாளர் உரிய பதில் அளிக்காமல் பெற்றோரை அனுப்பியதால் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.





