ஐஸ்வர்யம் அதிகரிப்பதற்காக இரண்டு பெண்கள் நரபலி..!
கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுத்தது உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்த தம்பதி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கணவன், மனைவி முகவராக செயல்பட்டவர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடும்பத்தில் ஐஸ்வர்யம் அதிகரிப்பதற்காக இரண்டு பெண்களை நரபலி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த இரு பெண்களை கழுத்தறுத்து நரபலி கொடுத்து உள்ளனர். இரண்டு பெண்களை நரபலி கொடுத்து உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்த கொடூரம் அங்கிருக்கும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.





