மீன்பிடிக்க சென்ற மூன்று சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு..!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் மீன்பிடிக்க சென்ற மூன்று சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுவர்கள் வீட்டிற்கு வராததால் பெற்றோர் தேடி சென்று பார்த்த பொழுது குட்டையில் உடல் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 3 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.





