தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியிலும் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் இரவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக சேத்துப்பட்டு, சூளைமேடு, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அம்பத்தூர், தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் பரபரப்பாக கனமழை பெய்தது.





