--- --:--:-- --

அதிக ஒலி எழுப்பிய இளைஞர்களுக்கு தண்டனை வழங்கிய காவல் துறை..!

3

த்திய பிரதேசத்தில் திருவிழாவின் பொழுது அதிக ஒலி எழுப்பும் பொம்மை டிரம்பை வாசித்த இளைஞர்களுக்கு காவல்துறையினர் வினோதமான தண்டனையை வழங்கினர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தசரா பண்டிகையை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது.

 

இதில் பங்கேற்க வந்த பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் ஒலி மாசு ஏற்படுத்தும் வகையிலும் பொம்மை டிரம்பட்டை அங்கிருந்த இளைஞர்கள் வாசித்தனர். இதனை கவனித்த காவல்துறையினர் அந்த இளைஞர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த டிரம்பட்டை வாங்கி சத்தமாக ஒலிக்க விட்டு தண்டனை வழங்கினார்.

 

Right Menu Icon