ஹிஜாப்புக்கு எதிராக தலைமுடியை வெட்டி கண்டனத்தை தெரிவித்த உறுப்பினர்..!
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஹிஜாப்புக்கு எதிராக குரல் எழுப்பிய ஸ்வீடனைச் சேர்ந்த உறுப்பினர் தனது தலைமுடியை வெட்டி கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
ஹிஜாபை முறையாக அணியவில்லை என்று கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண் காவல்நிலையத்தில் உயிரிழந்ததனை கண்டித்து பல்வேறு நாடுகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் பேசிய ஸ்வீடனைச் சேர்ந்த உறுப்பினர் ஈரான் பெண்களுக்கு விடுதலை வேண்டும் என்று முழக்கமிட்டபடியே தனது தலைமுடியை வெட்டி தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





