--- --:--:-- --

அண்ணன் தம்பி இருவரையும் கடித்த பாம்பு..!

7

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இரு சிறுவர்களை பாம்பு கடித்ததில் அண்ணன் உயிரிழந்த நிலையில் தம்பி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆரணியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாபுவின் மகன் ரமேஷ் மற்றும் சிறுவன் பள்ளியில் படித்து வந்தனர்.

 

இந்நிலையில் நேற்று குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரு சிறுவர்களையும் கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது. சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி அண்ணன் உயிரிழந்தான். தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon