கேஸ் சிலிண்டருக்கு இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம் !!! ஸ்வைப் மெஷின் வந்தாச்சு !!!
வீடுகளுக்கு சிலிண்டர்களை வினியோகம் செய்யும் போது கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தும் வகையிலான ஸவைப் மெசின் அறிமுக விழா கோவையில் நடைபெற்றது.வீடுகளுக்கு சிலிண்டர்களை வினியோகம் செய்யும் போது அவர்கள் அதற்கான கட்டணத்தை பணமாக செலுத்தும் நிலை தற்போது உள்ளது.இதனால் சில்லறை பிரச்சினை ஏற்படுகிறது.

மேலும்,கூடுதல் பணம் தந்தால் தான் சிலிண்டரை வினியோகம் செய்வோம் என்று கியாஸ் ஏஜென்சி ஊழியர்கள் பல இடங்களில் தகராறு செய்கின்றனர்.இதனால் இதற்கு தீர்வு காணும் வகையில் டிஜிட்டல் முறையில் ஸ்வைப்பிங் செய்து பணபரிமாற்றம் செய்யும் முறையை கோவை இண்டேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.இதற்கான அறிமுக விழா மற்றும் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு ஸவைப் மெசின் வழங்கும் விழா கோவை சுந்தராபுரம் அசோக் இண்டேன் ஏஜன்சி வளாகத்தில் நடைபெற்றது.

இண்டேன் நிறுவன மண்டல மேலாளர் சனில் குமார், மற்றும் இண்டேன் நிறுவனத்தின் மேலாளர்கள் அலெக்ஸி ஜோசப், சத்யபிரியா,பிரதாப்,மற்றும் அசோக் இண்டேன் ஏஜன்சி உரிமையாளர் அசோக் ஆகியோர் கலந்து கொண்டு சிலிண்டர் விநியோக ஊழியர்களுக்கு டிஜிட்டல் பண பரிமாற்றம் செய்வதற்கான ஸ்வைப் மெசினை வழங்கினர்.

அதனைதொடர்ந்து 5 கிலோ சிலிண்டருக்கான சில்லறை வர்த்தகம் குறித்த நிகழ்ச்சியில் காந்தி நகர் பகுதியில் உள்ள ஆவின் பால் விற்பனையகத்திற்கு 5 கிலோ சிலிண்டர் வழங்கப்பட்டது.மேலும், வணிக வளாகத்தில் 5 கிலோ சில்லறை விற்பனையை துவக்கி வைத்து பேசிய மண்டல மேலாளர் சனில் குமார், 5கிலோ எரிவாயு சிலிண்டர் சுற்றுலா செல்பவர்களுக்கும்,வெளியூர் செல்பவர்களுக்கும்,லாரி ஓட்டுநர்களுக்கும் சமையல் செய்வதற்கும் உபயோகமாக இருக்கும் என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




