மருமகனை கோடாரியால் அடித்து கொன்ற மாமனார்..!
ராமநாதபுரம் அருகே மருமகனை கோடாரியால் மாமனார் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர்கள் உதயசூரியன் – காளீஸ்வரி தம்பதியினர். இந்நிலையில் உதயசூரியன் அடிக்கடி மது போதையில் மனைவியை அடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவத்தன்று மீண்டும் இருவர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாமனார் கோடாரியால் தனது மருமகனை தலை மற்றும் கை, கால்கள் பகுதியில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மருமகனை மீட்டு அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






