--- --:--:-- --

நடிகர் போண்டா மணிக்கு உதவியை செய்வேன் என நடிகர் வடிவேலு..!

3

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டா மணிக்கு தன்னால் முடிந்த உதவியை செய்வேன் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் மேற்கொண்டார். அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தற்போது நடிக்கும் திரைப்படங்களை மக்கள் எதிர்பார்க்கும் நகைச்சுவைகள் நிறைந்துள்ளதாக கூறினார். நாய் சேகர் படத்தில் தான் பாடிய பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று வடிவேலு தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon