வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு..!
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்தான். குருசாமி – சரண்யா தம்பதியினர் இவர்களுக்கு புஷ்பராஜ், அபினேஷ் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் அம்மாபேட்டை அருகே காலி மனையில் வீடு கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டது. அந்த குழி மழையின் காரணமாக தண்ணீர் நிரம்பியுள்ளது. அந்த குழிக்குள் விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளான்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





