பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்கள்..!
சென்னை புரசைவாக்கத்தில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
இன்று காலை புரசைவாக்கம் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் அந்த வழியாக பேருந்து தொங்கிக்கொண்டிருந்த மாணவர்களை இறக்கி ஆபத்தான முறையில் பயணிக்கக் கூடாது என்றும் தங்களை படிக்க வைக்க பெற்றோர் துன்பப்படுவதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





