காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்..!
அரசு பள்ளியில் பயிலும் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கும் திட்டம் சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அறிஞர் அண்ணா பிறந்த நாளான இன்று இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதல் கட்டமாக 26 தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு செயல்படுத்தப்படுகிறது.
இதற்காக மூன்று இடங்களில் சமையல் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கிருந்து பள்ளிகளுக்கு வாகனங்கள் உணவு கொண்டு செல்லப்படுகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் காலை உணவு திட்டத்திற்கான சமையல் கூடத்தை பார்வையிட்டு பின்னரும் உணவு எடுத்து செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.





