--- --:--:-- --

கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் விழுந்ததில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு..!

4

கோவையில் தொண்டாமுத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் விழுந்ததில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். கோவையை சேர்ந்த ரோஷன், ஆதர்ஷ், நந்தனன், ரவி கிருஷ்ணன் ஆகிய நான்கு கல்லூரி மாணவர்கள் தொண்டாமுத்தூர் சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கழகம் ஒன்றில் நேற்று இரவு ஓணம் பண்டிகையை கொண்டாட சென்றிருந்தனர்.

 

கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு காலை ஐந்தரை மணியளவில் மீண்டும் வரும் வழியை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போது அவர்கள் ஓட்டி வந்த கார் மாரியம்மன் கோயில் அருகே கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த விவசாய கிணற்றுக்குள் விழுந்தது.

 

காரை ஓட்டிய ஒரு மாணவர் மட்டும் காரில் இருந்து தப்பித்த நிலையில் மற்ற மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அடிப்படையில் விரைந்து வந்த மீட்பு படையினர் கிணற்றுக்குள் மூழ்கிய மாணவர்களின் உடலை மீட்டு வருகின்றனர்.

 

Right Menu Icon