இன்று முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு..!
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இமானுவேல், சேகரன் நினைவுதினம், முத்துராமலிங்கம் குருபூஜை வரவுள்ள நிலையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏராளமானோர் வருகை தர உள்ளதாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





