--- --:--:-- --

திருக்குறளை தலைகீழாக எழுதி சாதனை படைத்த கல்லூரி மாணவி

jhgfjj

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி சுகன்யா.தற்போது கோவை கிருஷ்ணா கல்லூரியில் கணிணி துறையில் பட்டபடிப்பு படித்து வரும்,இவர் சிறு வயது முதலே தமிழ் மற்றும் ஆங்கில வாசகங்களை தலைகீழாக எழுதும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

 

இந்நிலையில் இவரது தொடர் பயிற்சியின் காரணமாக திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலைகீழாக அதுவும் இரண்டு வடிவங்களில் இடமிருந்து வலமாகவும்,வலமிருந்து இடமாக என நான்கு வகையாக எழுதி சாதனை படைத்துள் ளார்.

இவரது இந்த சாதனையை பாராட்டி NOBLE WORLD RECORD சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து நமது செய்தியாளரிடம் பேசிய சுகன்யா சிறு வயது முதலே ஏதாவது சாதனையை செய்ய வேண்டும் என்று ஏதாவது சாதனையை செய்ய வேண்டும் என்று தோன்றிய எனக்கு ஒரு நாள் எழுத்துக்களை தலைகீழாக எழுதி கண்ணாடியில் பார்த்தபோது அவை சரியாக கண்ணாடியில் பிரதிபலித்ததை காண முடிந்தது.

 
 

எனவே,நாம் ஏன் இது போன்று தலைகீழாக எழுதும்  சாதனையை செய்யக் கூடாது என எண்ணி தொடர்ந்து பல ஆண்டுகளாக முயற்சி செய்து திருக்குறளின் 1330 குறட்பாக்களை நான்கு வடிவங்களாகத் தலைகீழாக எழுதி உள்ளதாகவும் இதற்கு மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் ஆனதாக கூறிய அவர், மேலும் எனது சாதனையை நானே முறியடிக்கும் விதமாக இரண்டு கண்ணாடிகளில் ஒரே நேரத்தில் பார்த்தாலும் சரியாக தெரியும்படியான எழுத்து வடிவத்தை தாமே அமைக்கும் சாதனை முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாது உலக நாடுகளின் 196 நாடுகளின் பெயர்களை பனை ஓலைகளில் தலைகீழாக கற்கால முறைப்படி இவர் எழுதியுள்ளதும் குறிப்பிடதக்கது.இவரது இந்த சாதனை பாராட்டி Noble world record சான்றிதழை அளித்து இதன் ஆசியாவின் இயக்குனர் தியாகு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

தமிழக மாணவ,மாணவிகளின் இது போன்ற பல்வேறு சாதனைகளை ஊக்குவித்து வரும் தமிழக அரசு,இது போன்று மாணவியின் வித்தியாசமான சாதனையை கவனத்தில் கொண்டு அவரது சாதனையை மேலும்,ஊக்குவிக்கும் விதமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Right Menu Icon