அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்படும்..!
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வருங்காலத்தில் கொண்டுவரப்படும் என மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உறுப்புகளை விரைந்து எடுத்துச் செல்வதற்கான தொழில்நுட்பத்தை மருத்துவமனை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுக நிகழ்ச்சியில் காணொலி முறையில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கிராமங்களுக்கும் தரமான மருத்துவ சேவைகளை கொண்டு செல்ல வேண்டும் என மருத்துவத் துறையினரிடம் கேட்டுக் கொண்டார்.
அடுத்து பேசிய தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒரு மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் அரசு மருத்துவமனை இணைந்து செயல்பட தனியார் மருத்துவமனைகள் மூலம் முன்வர வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.





