--- --:--:-- --

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பு கொலை அல்ல..!

2

ள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்புக்கு பாலியல் வன்கொடுமை கொலையோ காரணமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் உறுதிபட தெரிவித்துள்ளது. கணியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவ குழு அறிக்கையின்படி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை அல்லது கொலை செய்யப்படவில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

 

மாணவியின் இறப்புக்கும் கொலை குற்றச்சாட்டுக்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ள நீதிபதி அதை தற்கொலைதான் என்று கூறியுள்ளார். மாணவியின் தற்கொலை கடிதம் மற்றும் சக மாணவிகளின் சாட்சியத்தின் அடிப்படையில் வேதியியல் பாடத்தைப் படிப்பதால் சிரமம் இருந்தது தெரிய வருவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

அதிலும் ஆசிரியர்கள் தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி நன்கு படிக்க வேண்டும் என கூறியதற்காக ஆசிரியர்கள் தற்பொழுது சிறைவாசம் அனுபவிப்பது துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்துள்ளார். மாணவியின் உடலில் இருந்த காயம் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததால் ஏற்பட்டது என்றும் சுவரிலிருந்தது ரத்தக்கரை இல்ல சிவப்பு நிற பெயிண்ட் என்றும் நீதிபதி கூறியிருக்கிறார். இதனையடுத்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் முதல்வர் ஆகியோர் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

Right Menu Icon