கூகுள் மேப்பை பார்த்து வெள்ளத்தில் சிக்கிய கார்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட காரில் சிக்கிய 4 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். கர்நாடகாவைச் சேர்ந்த மகேஷ் என்பவர் தனது குடும்பத்தினர் நான்கு பேருடன் ஓசூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
அவர்கள் கூகுள் மேப் செயலியை பயன்படுத்தி காரில் பயணித்துள்ளனர். அப்பகுதியில் தரைப்பாலம் 15 அடிக்கு மேல் தண்ணீர் பாய்ந்து உள்ளதில் காருடன் சிக்கிக்கொண்டனர். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் காரில் பயணித்த 4 பேரையும் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். சேதமான நிலையில் கார் மீட்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




