சேலம் அரசு மருத்துவமனையில் போலி மருத்துவர்கள் இருவர் கைது..!
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் போலி மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மருத்துவமனையில் உள்ள கண் மருத்துவப் பிரிவுக்கு வந்த கார்த்திகேயன் சர்மா ஆகியோர் தங்களை மருத்துவர்கள் என கூறிக்கொண்டு செவிலியர்களை கேலி செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அங்கிருந்த பிற மருத்துவர்களிடம் செவிலியர்கள் தெரிவித்த நிலையில் அந்த இருவரிடமும் விவரங்களை கூறிய மருத்துவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இருவரும் போலி மருத்துவர்கள் என கண்டறியப்பட்டதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





