நடிகை சோனாலி மரண வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோவா அரசு முடிவு..!
நடிகை சோனாலி மரண வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோவா அரசு முடிவு செய்துள்ளது. கோவாவை சேர்ந்த சோனாலி கடந்த 23ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். போதை மருந்து கலந்த பானத்தை அவருக்கு வழங்கிய உதவியாளர்கள் இருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர் .
சோனாலி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு அவரது குடும்பத்தினரும், ஹரியானா முதலமைச்சரும் வலியுறுத்தி இருந்தனர். இதை ஏற்று சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க கோவா அரசு முடிவு செய்துள்ளது. சிபிஐயிடம் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோவா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.





