தனியார் விடுதியில் தங்கியிருந்த நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு..!
செங்கல்பட்டில் தனியார் விடுதியில் தங்கியிருந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை சேர்ந்த நபர் கத்தார் நாட்டில் பணிபுரிந்துவிட்டு விடுமுறைக்காக இந்தியா வந்துள்ளார்.
இவருக்கும், செங்கல்பட்டை சேர்ந்த சுபாஷினிக்கும் திருமணம் நடந்தது. கணவன் மனைவி இருவரும் வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு காயம் அடைந்துள்ளனர். இதனால் சுபாஷினி தனது குழந்தை மற்றும் கணவருடன் செங்கல்பட்டில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த சில நாட்களாக ஓய்வெடுத்து வந்துள்ளார்.
தினமும் மது அருந்துவதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்படவே ஜெய்கணேஷ் செங்கல்பட்டு நகரில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கியிருந்துள்ளார்.
இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் அறையை சுத்தம் செய்வதற்காக வந்தபொழுது ஜெய்கணேஷ் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை மீட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





