20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஞாயிறன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார்வளைகுடா, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





