திருமணத்திற்கு ஆறு நாட்களே இருந்த நிலையில் இளைஞர் தற்கொலை..!
காஞ்சிபுரம் அருகே நிதி நிறுவன மோசடி காரணமாக திருமணத்திற்கு ஆறு நாட்களே இருந்த நிலையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிந்தவாடி அகரம் சேர்ந்த விஜய் பாஸ்கர் என்பவர் நிதி நிறுவனத்தில் நுகர்வோராக செயல்பட்டு வந்தார்.
விஜயபாஸ்கரனை நம்பி அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் நிதி நிறுவன மோசடி செய்த நிலையில் அந்த பகுதி மக்கள் விஜயபாஸ்கரிடம் முறையிட்டுள்ளனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானவர் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் வரும் 1ஆம் தேதி அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பகுதி மக்களின் நெருக்கடியும் திருமண ஏற்பாட்டிற்கும் பணம் இல்லை என தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த விஜயபாஸ்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.





