--- --:--:-- --

தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 6 வயது சிறுமி..!

4

காஞ்சிபுரத்தில் தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார்த்திக் என்பவரின் 6 வயது மகள் வீட்டில் தண்ணீர் என நினைத்து தவறுதலாக மண்ணெண்ணெய்யை குடித்துள்ளார்.

 

இதையடுத்து உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Right Menu Icon