பிக் பாஸ் புகழ் நடிகை மாரடைப்பால் மரணம்..!
இந்தியாவில் சின்னத்திரையில் மிகப்பெரிய ஹிட் ஆன நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.ஹிந்தி பிக் பாஸ் 14வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகை சோனாலி போகட். அவர் இன்று திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 41.
அது பற்றி பிரபலங்கள் பலரும் அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றனர். சோனாலி போகட் Amma: Ek Maa Jo Laakhon Ke Liye Bani Amma என்ற சீரியல் மூலமாக அறிமுகம் ஆனார். அதன் பின் The Story Of Badmashgarh என்ற வெப் சீரிசில் நடித்தார். மேலும் டிக்டாக்கிலும் அவர் மிக பிரபலமாக இருந்தார்.
அவர் இறப்பதற்க்கு முன் இன்ஸ்டாவில் ஒரு போட்டோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது.






