--- --:--:-- --

அம்மா உன்ன மிஸ் பண்றேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை..!

5

சென்னை அயனாவரம் இளைஞரொருவர் அம்மா உன்ன
மிஸ் பண்றேன் என கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அயனாவரத்தை சேர்ந்த கலா என்பவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

 

அவரது மகன் விஜய் வீட்டில் உள்ள தனியார் இருசக்கர வாகன விற்பனை ஷோரூமில் வாட்டர் சர்வீஸ் செய்யும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டிற்கு வந்த போது கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது.

 

அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு ஹாலில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் இருந்ததைக் கண்ட கலா பதறியடித்து அவரை கீழே இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து வீட்டை சோதனை செய்ததில் விஜய் எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதன் மூலம் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Right Menu Icon