காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரே அறையில் தூக்கிட்டு காதலர்கள் தற்கொலை..!
நாகர்கோயிலில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரே அறையில் தூக்கிட்டு காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உமா கௌரி என்ற பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உமாவின் வீட்டில் இருவரும் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
தகவலறிந்த போலீசார் இருவரின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





