டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா..! பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம்..!
டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் தினமும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 8205 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரித்து உள்ளன. இதனால் நோய் பரவலை தடுக்க பொது இடங்களில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நான்கு சக்கர வாகனங்களில் ஒன்றாக பயணிப்பவர்களுக்கு அபராதம் பொருந்தாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராமன் நீதிமன்றத்திற்கு வரும் பொழுது அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





