விருமன் படத்தில் ராஜலட்சுமி பாடிய பாடல் நீக்கம்..!
விருமன் படத்தில் ராஜலட்சுமி பாடிய பாடல் நீக்கப்பட்டுள்ளது. சூப்பர் சிங்கர் மூலம் கிடைத்த புகழ் கிராமிய பாடகி ராஜலட்சுமி. தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் முதல் பாடலில் ஹிட் அடித்ததால் மிகவும் பிஸியான பாடகரான ராஜலட்சுமி கணவர் செந்தில் கணேஷ் உடன் இணைந்து உள்ளூர் மற்றும் வெளி நாடுகளுக்கு எல்லாம் சென்று கிராமிய கச்சேரிகளில் பாடி வந்தார்.
புஷ்பா படத்தில் ராஜலட்சுமி பாடிய அய்யா சாமி பாடல் மெகா ஹிட் அடித்தது. மதுர வீரன் பாடல் ராஜலட்சுமி பாடி இருந்தார். அவருக்கு பாடல் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பு வராத நிலையில் மதுர வீரன் பாடல் மேடையில் அதிதியின் குரலில் வெளியானது.
இந்த நிலையில் தனது குரலில் பதிவு செய்யப்பட்ட மதுரை வீரன் பாடல் என்னவானது என தெரியாமல் கண்ணீர் விட்டுக் கலங்கும் நிலைக்கு கிராமிய பாடல் ராஜலட்சுமி தள்ளப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக விசாரித்த பொழுது ராஜலட்சுமியின் குரல் கணீர் குரல் ஆக இருப்பதால் இவருடன் பாடும் பொழுது யுவன் குரல் டம்மியாக இருப்பதை உணர்ந்துள்ளார். அதே நேரத்தில் படத்தின் நாயகி பாடிய பாடல் என்றால் கூடுதல் கவனம் பெறும் என்பதால் அதிதி சங்கரை பாட வைத்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





