சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 பேர் படுகாயம்..!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த இடத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஒரு பகுதியாக டீக்கடையாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செல்வராஜ் வழக்கம்போல் தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து டீ கடைக்கு 4 பேர் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதனால் படுகாயம் அடைந்த செல்வராஜ் மற்றும் ராமகிருஷ்ணன் உட்பட 5 பேர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். டீக்கடையில் உள்ள தனி அறையில் இருந்த சிலிண்டரில் ஏற்பட்ட கேஸ் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.





