பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்..!
மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்கல்வி ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
கருப்பாயூரணி அருகே உள்ள அரசு பள்ளியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர் அன்பழகன் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு அதனை வெளியில் சொல்லக்கூடாது என ஆசிரியர்கள் மற்றும் அகிலா ஆகியோர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி 1098 என்ற கட்டுப்பாடு எண்ணுக்கு தொடர்பு கொண்டு குழந்தைகள் நல அதிகாரியிடம் புகார் தெரிவித்ததையடுத்து மூன்று ஆசிரியர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





