அவையில் கண்கலங்கிய வெங்கையா நாயுடு..!
குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து விடைபெறும் வெங்கையா நாயுடு அவையில் கண்கலங்கியது உணர்ச்சிபூர்வமாக அமைந்தது. குடியரசுத் துணை தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையாநாயுடுவின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி அவர் குறித்த பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சி எம்பிக்கள் அவையில் பாராட்டி பேசினார்.
வெங்கையா நாயுடுவிடம் கற்ற பாடங்கள் மூலம் அனைவரும் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அவரது அனுபவங்கள் இந்த நாட்டை வருங்காலத்தில் வழிநடத்தும் எனவும் குறிப்பிட்டார்.
தாய்மொழி தன் பார்வையை போன்றது மற்றவை மூக்கு கண்ணாடி போன்றவை என வெங்கையா நாயுடு அடிக்கடி கூறுவதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
இது போன்ற பல்வேறு கட்சிகளும் வெங்கையா நாயுடுவின் பதவி காலத்தில் நடந்த அனுபவங்களை கூறி புகழாரம் சூட்டினார். அப்போது மாநிலங்களவை தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்த வெங்கையா நாயுடு கண்கலங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





