தன்னை அவமானப்படுத்தியதாக கூறி இளைஞரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து தாக்கிய சம்பவம்..!
சமூக வலைத்தளத்தில் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி இளைஞர் ஒருவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து சரமாரியாக தாக்கிய சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. கொல்லம் பகுதியை சேர்ந்த ராகுல் என்பவர் அச்சு என்பவரை நேரில் வரவழைத்து அவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்.
பின்னர் அச்சுவை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் வெளியான நிலையில் ராகுலை காவல்துறையினர் கைது செய்தனர். தாக்குதலுக்கு ஆளான இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





