--- --:--:-- --

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தண்டவாளத்தில் படுத்த மக்கள்..!

2

திருவள்ளூர் மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ஐஏஎஸ் அதிகாரியான அபூர்வாவின் தாயார் ஊராட்சி மன்ற தலைவர் அருள்முருகன் உட்பட 4 பேர் வீடு கட்டி வருகின்றனர்.

 

ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் இருந்தன. நீதிமன்ற உத்தரவின் பேரில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் வருவாய்த்துறையினர் கட்டடங்களை அகற்றினர். அதிகாரியின் தாயார் வீட்டை மட்டும் முழுமையாக இடிக்காமல் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோரும் தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தினார்.

 

அங்கு சென்ற காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மயிலாடுதுறையில் பழங்குடி பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை கண்டித்து மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

ஒருவர் தீக்குளிக்க முற்பட்டார். மேலும் வீட்டுக்குள் இருந்த பெண் ஒருவரை கதவை உடைத்து காவல்துறையினர் மீட்டனர். நீதிமன்ற உத்தரவை எடுத்துக் காட்டி ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon