பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய மம்தா பானர்ஜி..!
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். டெல்லியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளிட்டவை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.





