--- --:--:-- --

தேவதை போல் மாறிய நடிகை ஷிவானி நாராயணன்..!

11

பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் எனும் சீரியலில் நடித்திருந்தார்.

 

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்தார்.இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து 90 நாட்களுக்கு பின் வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் முடிந்த கையோடு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை ஷிவானி பெற்றார்.

 

ஆம் விக்ரம், வீட்ல விசேஷம், ஆகிய படங்களில் நடித்துள்ள ஷிவானி அடுத்ததாக நாய் சேகர் returns, பம்பர், வி.ஜே.எஸ் 46 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில், நடிகை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜொலிக்கும் சில்வர் நிற உடையில் தேவதை போல் இருக்கும் தனது புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon