--- --:--:-- --

சேலையில் கட்டப்பட்ட தூளியில் கழுத்து இறுக்கி சிறுவன் உயிரிழப்பு..!

10

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சேலையில் கட்டப்பட்ட தூளியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் சேலை இறுக்கு உயிரிழந்தார். சேவியர் – அருளரசி தம்பதிக்கு லெனின், சந்தோஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

 

நேற்று துக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக புறப்பட்ட தம்பதி இரு மகன்களையும் விட்டு விட்டு சென்றால் சண்டையிட்டு கொள்வார்கள் என்று எண்ணி வீட்டிலேயே விட்டுவிட்டு டிவி பார்க்குமாறு கூறிவிட்டு இளைய மகனை மட்டும் தங்களுடன் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

 

மாலை அவர்கள் வீடு திரும்பிய பொழுது சிறுவன் வீட்டின் பின்பக்கம் வேப்ப மரத்தில் சேலை கழுத்தில் இறுக்கி தொங்கி கொண்டிருந்ததை கண்டு பதறிப் போய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

பெற்றோர் வெளியூர் செல்லும்போது குழந்தைகளை தனியே விட்டு செல்லாமல் அழைத்துச் செல்ல வேண்டும். இதுபோல அஜாக்கிரதையாக விட்டுச் சென்றால் குழந்தைகளின் விளையாட்டு விபரீதம் ஆகிவிடும் என போலீசார் எச்சரிக்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon